கருணை கொலை செய்யக்கோரி மனு? நளினி சாகும் வரை உண்ணாவிரதம்

Report Print Fathima Fathima in இந்தியா

இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு முருகன், நளினி, பேரறிவாளன் ட்பட ஏழு பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது விடுதலை மற்றும் பரோல் தாமதம் போன்ற காரணங்களால் நேற்று(நவம்பர் 28ம் திகதி) நளினி முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார், இதுபற்றி சிறைத்துறைக்கு முறைப்படி கடிதமும் கொடுத்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே காரணங்களால் முருகன் மற்றும் நளினி இருவரும் உண்ணாவிரதம் இருந்தனர், அதிகாரிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து நளினி விரதத்தை கைவிட்டார்.

இதற்கிடையே தன்னை கருணை கொலை செய்யக்கோரி நளினி பிரதமருக்கு மனு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்