பாலத்தில் இருந்து பறந்து விழுந்து விபத்துக்குள்ளான கார்: குலைநடுங்க வைக்கும் காணோளி காட்சி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று விழுந்து விபத்தில் சிக்கியதன் காணொளி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள கட்ச்பவுளி பகுதியில் பயோடைவர்சிட்டி மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மேம்பாலத்தில் அதிவேகமாக வரும் சிவப்பு நிற கார் ஒன்று அதன் வளைவில் தன் கட்டுப்பாட்டை இழந்து பக்கசுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

கார் அசுரவேகமாக வந்ததால் பக்கசுவரில் இடித்து மேலே இருந்து கீழே பறந்து வந்து விழுந்தது.

இதில் கீழே நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது கார் மோதியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதம் அடைந்தன.

மேலிருந்து கீழே விழுந்த கார் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கார் சாரதி உள்ளிட்ட இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான மேம்பாலம் 3 நாட்களுக்கு மூடப்பட்டும் என ஹைதராபாத் மாநாகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்