கோட்டபாய பதவி ஏற்று ஒருவாரத்திற்குள் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலை! ஆனால் அமைச்சரின் விளக்கம்...

Report Print Abisha in இந்தியா

கோட்டாபாய ராஜபக்‌ஷ பதவி ஏற்று ஒருவாரக்காலம் ஆன நிலையில், தமிழக மீனர்கள் விரட்டியடிக்கப்பட்டதற்கு, இலங்கை அமைச்சர் கவலை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

கோட்டாபாய ராஜபக்‌ஷ 18ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பின் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மகிந்தா ராஜபக்சே இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராமேஷ்வரம் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 21ஆம் திகதி அதிகாலையில் இலங்கை கடற்படையினால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், தங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், 29ஆம் திகதி இந்தியா வரும் கோட்டாபாய ராஜபக்‌சேவிடம் பேசி மீனவர்கள் பிரச்னையில் இந்திய அரசு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், இது குறித்து இன்று பேசிய இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ”இலங்கை அதிபராக கோட்டாபாய ராஜபக்‌ஷ இருப்பதால் தமிழக மீனவர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்