சாலையில் குறுக்கிட்ட காளைமாடு... கட்டுப்பட்டை இழந்த பேருந்து: உடல் நசுங்கி மரணமடைந்த பயணிகள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் குறுக்கிட்ட காளைமாடு ஒன்றால் பேருந்து விபத்தில் சிக்கியதில் 12 பயணிகள் உடல் நசுங்கி மரணமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 10 படுகாயமடைந்துள்ளதாகவும், அதில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடம் எனவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மராட்டிய மாநிலம் லத்தூரில் இருந்து ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிசார் பகுதிக்கு சென்ற பேருந்தே காளைமாடு காரணம் விபத்தில் சிக்கியுள்ளது.

சாலையில் குறுக்கிட்ட காளைமாடு ஒன்றை காப்பாற்ற பேருந்து சாரதி முயற்சிக்கவே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த நால்வரை மீட்டு மாவட்ட சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எஞ்சியவர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் 6 பெண்களும் எஞ்சியர்வர்கள் ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்