நடிகர், தொழிலதிபர்? இளம் பெண்களிடம் உல்லாச வாழ்க்கை! கைதான தமிழக இளைஞனை பற்றி திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த இளைஞன் தொழிலதிபர், நடிகர், பிரபல எம்.எல்.ஏவின் மகன் என்று கூறி நடிக்க வேண்டும் என்று ஆசையில் இருக்கும் இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூருவுக்கு வேலை தேடி வரும் இளம் பெண்கள் மற்றும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மொடலிங் பெண்களை இளைஞர் ஒருவர் தான் எம்.எல்.ஏவின் மகன், மருத்துவமனை உரிமையாளர் என்று கூறி, குறித்த பெண்களை பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பொலிசாருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் இளம் பெண் ஒருவர், பெங்களூரு அல்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குறித்த புகாரில் கார்த்திக் ரெட்டி என்ற இளைஞன் தன்னை ஹோட்டல் உரிமையாளர் என்றும் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் என்று அறிமுகம் செய்து கொண்டான்.

அவன் தனக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தான், இதையடுத்து இருவரும் நெருங்கிய பழகிய நிலையில், அவன் என்னை அல்சூர் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.

அங்கு திருமணம் ஆசை காட்டி என்னை பலாத்காரம் செய்துவிட்டு, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி தப்பி சென்றுவிட்டான். ஹோட்டலில் விசாரித்த போது, கார்த்திக் என்ற பெயரில் அறை பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்ததால், நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன், அதன் பின் ஹோட்டலுக்கு தானே பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பி வந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் கார்த்தி என்ற நபரை தேடி வந்த நிலையில், விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து பெங்களூரு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபர் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த நபரின் உண்மையான பெயர் கார்த்திக் கிடையாது, ஜஹாங்கீர். 30 வயதான இவர் எம்.பி.ஏ பட்டதாரி. சென்னையில் இருக்கும்

கிரீன் கோக்கநெட் ஓட்டலில் குரூப் மேலாளராக வேலை பார்த்து வந்த இந்த இளைஞன், அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சாதரணமாக பேசும் திறன் கொண்டவர்.

இதன் மூலம் பெண்களை அதிகமாக கவர துவங்கினார். ஆரம்பத்தில் சின்ன சின்ன பொய்களை கூறி பெண்களை ஏமாற்றி வந்த இவர், சொகுசு வாழ்க்கை மற்றும் சுகத்துக்கு அடிமையாகி, டிப் டாப்பாக உடையணிந்து வேலை தேடி அலையும் பெண்கள் மற்றும் தனது ஹோட்டலுக்கு வரும் பெண்களை குறி வைத்து, மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளார்.

பெண்களிடம் தான் ஒரு ஹோட்டல் உரிமையாளர், மருத்துவமனை சொந்தமாக உள்ளது, பிரபல அரசியல்வாதியின் மகன் என்று ஆசைவார்த்தை கூறி, அந்த பெண்களை காதல் வலையில் விழ வைத்து, அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளான்.

தமிழகத்தில் ஏராளமான வழக்குகள் இவன் மீது பதிவாகியுள்ளன. இதனால் தமிழகத்தில் இருந்து பெங்களூரு தப்பி வந்த இவன் எம்.ஜி ரோடு பகுதியில் தனியாக நின்ற பெண்ணிடம், தன்னை முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் என்று கூறி, அவர் வேலை தேடி வந்திருப்பதை அறிந்து, தான் வைத்திருக்கும் ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அத பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 23-ஆம் திகதி கைக் குழந்தையுடன் பெண் ஒருவர் ஹைதராபாத்திற்கு திரும்புவதற்காக காத்திருந்த பெண்ணிடம், தன்னை கார்த்திக் ரெட்டி என்று அறிமுகம் செய்து, அந்த பெண்ணிடம் எந்த ஊர் செல்லவேண்டுமென்று விசாரித்து விட்டு, அவர் ஹைதராபாத் என்றதும், நானும் அங்குதான் செல்கிறேன், நான் இறக்கிவிடுகிறேன் என்று கூறி அவரை நம்ப வைத்து காரில் ஏற்றி சென்றுள்ளார்.

அப்போது குழந்தைக்கு பால் வாங்கி வருவதாக கூறி, அந்த பெண்ணின் கிரெடிட் கார்டை வாங்கி சென்று அதில், 40 ஆயிரம் ரூபாயை எடுத்து,விட்டு அந்த பெண்ணை தனியாக விட்டு, காரில் தப்பி ஓடியுள்ளான்.

இதேபோன்று நடிப்பில் ஆர்வமாக இருந்த இளம் பெண் ஒருவரிடம் நடிகர் என்று கூறி, மைசூருக்கு அழைத்து சென்று ஹோட்டலில் புக் செய்து, அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, தப்பி ஓடியுள்ளான்.

இதே போன்று பல பெண்களை வேலை வாங்கி தருவதாகவும், நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான். இதில் ஒரு சில பெண்கள் புகார் அளித்துள்ளனர். ஒரு சிலர் புகார் அளிக்கவில்லை என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் பெங்களூரு மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகத்தில் இதுபோன்று ஜஹாங்கீர் கைவரிசை காட்டியுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள அவன், தற்போது பெங்களூரு அல்சூர்கேட் பொலிசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்