சென்னையில் உள்ள பகுதியில் நள்ளிரவில் உள்ளாடையுடன் சுற்றி திரியும் மர்ம நபர்! பீதியில் மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் உள்ளாடையோடு அரை நிர்வாணமாக திரியும் மர்ம நபரால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கமெராக்களை யாரோ இரவில் திருப்பி வைத்திருப்பது காலையில் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில், உள்ளாடைகள் மட்டுமே அணிந்து முகத்தை மறைத்த நபர் ஒருவர், கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன், சுவர் ஏறி குதித்து, வீடுகளை நோட்டம் விட்டு வந்துள்ளார்

அதுமட்டுமின்றி கையில் நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார். தனது முகம் சிசிடிவிவில் பதிவாகக்கூடாது என்பதற்காக அவர் சிசிடிவி கமெராக்களை மேலே பார்க்கும்படி திருப்பி விடுகிறார். பின்னர் வீடுகளின் ஜன்னல் கதவைத் திறந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்கிறார்.

இதுகுறித்து வளசரவாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன், அரை நிர்வாணக் கோலத்தில் திரியும் நபரை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்