தாலி கட்டிய சில மணி நேரங்களில் கணவனை காதலிக்கு விட்டுக் கொடுத்த இளம் பெண்! அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தாலி கட்டிய சில மணி நேரத்தில் முதல் மனைவிக்கு கணவனை கல்லூரி மாணவி விட்டுக் கொடுத்த நிலையில், பொலிசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒக்கநாட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். 22 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அப்போது தனியார் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சத்யப்பிரியாவை, சந்தோஷ் காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் நேற்று காலை தஞ்சாவூர் அருகே இருக்கும் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர்,

திருமணம் செய்த சில மணி நேரங்களில், திருப்பூர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று சத்யப்பிரியாவின் தந்தை பிரபாகரன் புகார் அளிக்க, பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சத்யப்பிரியா, சந்தோஷுடன் சென்றது தெரியவந்த நிலையில், இருவரும் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அப்போது திடீரென்று காவல் நிலையத்துக்குள் புகுந்த ஒக்கநாட்டைச் சேர்ந்த ரவி, மல்லிகா தம்பதியின் மகள் சரண்யா புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், சந்தோஷ் தன்னை காதலித்ததாகவும், நாங்கள் இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு தனியாக சுற்றியதாகவும், இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு சந்தோஷுடன் ஒன்றாக இருந்த புகைப்படங்களை காண்பித்துள்ளார்.

இதையடுத்து சத்யப்பிரியா சரண்யாவுக்கு சந்தோஷை விட்டு கொடுத்து விட்டு தனது பெற்றோருடன் செல்வதாக கூறிவிட்டுசென்றார். அதன் பின்சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் சந்தோஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்