கொத்து கொத்தாக செத்து மடிந்த வெளிநாட்டுப்பறவைகள்: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சாம்பர் ஏரியில் இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் செத்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் அமைள்ளது சாம்பர் உப்பு ஏரி. 35.5 கி.மீ நீளம் உடைய இந்த ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரி ஆகும்.

ஆண்டுதோறும் குளிர்காலங்களில் வெளிநாட்டு பறவைகள் இடம்பெயர்ந்து இங்கு வருவது வழக்கம். சுமார் 10 முதல் 20 வகையான பறவைகள் இங்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சாம்பர் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப்பறவைகள் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள், பறவைகளின் உடல்களை கைப்பற்றினர்.

| Photo Credit: PTI

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நீரின் மாசுத்தன்மை காரணமாக பறவைகள் இறந்திருக்கக் கூடும்.

10 வகையான பறவைகள் என மொத்தம் 1500 பறவைகள் இறந்துள்ளன. ஆனால் 5,000 பறவைகள் இறந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஏரியின் நீர் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பறவைகளின் உடல்களும் உடற்கூறு ஆய்விற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

1995 ஆம் ஆண்டு 20 ஆயிரம் எண்ணிக்கையில் வரை வருகைபுரிந்த பறவைகள், இந்த ஏரியின் வறட்சி மற்றும் குறைந்த பருவமழை காரணமாக தற்போது மிகக்குறைந்த அளவே வருகை தருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்