விரைவில் இந்தியா திரும்புவதாக கூறிய மகன்: சடலமாக வந்திறங்கியதை பார்த்து துடித்துப்போன தாய்

Report Print Vijay Amburore in இந்தியா

ஒரு மாதத்தில் இந்தியா திரும்புவதாக கூறிய மகன் சடலமாக வந்திறங்கியதை பார்த்து அவருடைய தாய் கதறி துடித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மோகன் குமார் (30) என்கிற இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத் சென்று இரும்புக் கடையில் வேலை பார்த்தார்.

நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கிய அவர் 2,000 தினார்களுக்கு (ரூ. 4.60 லட்சம்) ஒரு சீட்டு குழுவில் இணைந்துள்ளார்.

மோகன் அந்த தொகையை செலுத்த தவறியதால் அவரது நண்பர்கள் துர்கா ராவ் மற்றும் மது ஆகியோர், டிக் டாக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர்.

மோகனின் புகைப்படத்துடன் வெளியான அந்த வீடியோவில், அவர் பணம் செலுத்தாமல் காணாமல் போயுள்ளார், எங்காவது காணப்பட்டால் புகாரளிக்குமாறு தெரிவித்திருந்தனர்.

இந்த வீடியோவானாது இணையம் முழுவதும் வைரலானதை அடுத்து, நவம்பர் 3 ம் திகதி அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய தாயார் விஜய குமாரிக்கு போன் செய்த மோகன், ஒரு மாதத்தில் இந்தியா வந்துவிடுவேன் எனகூறியிருந்தார்.

இந்த நிலையில் மகன் இன்று சடலமாக வந்திறங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கதறி துடித்துள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்