காணாமல் போன 7வயது சிறுமி... பக்கத்து வீட்டில் கோணிப்பையில் சடலமாக கண்டெடுப்பு: தொடரும் மர்மம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் காணாமல் போன 7 வயது சிறுமி பக்கத்து வீட்டில் மர்மமாக கொல்லப்பட்டு கோணிப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திா மாநிலம் விஜயவாடாவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயாவாடாவில் வசித்து வருபவர்கள் அனில்-ராமானம்மா தம்பதி, இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

மதுபான கிடங்கில் பணியாற்றி வரும் அனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது 7 வயது மகளை காணாவில்லை என பவானிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஞாயிறு மாலை முதல் காணாமல் போன சிறுமியை, பொலிசார் தனிப்படை அமைத்து தேடியுள்ளனர். சிசிடிவி, ரயில் மற்றும் பேருந்து நிலையம், கிணறு மற்றும் குழி என அனைத்து இடங்களிலும் தேடியும் எவ்வித தடயமும் கிடைக்கவில்லையாம்.

இந்த விடயத்தில் உறவினர்களுக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது என பெற்றோர்கள் பொலிஸாரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும், அனில் உறவினர் குறித்து விசாரணை மேற்கொண்டதிலும் எந்த முன்னேற்றமும் இல்லையாம்.

இந்நிலையில், ஞாயிறு மாலை 4 மணிக்கு வெளியூருக்குச் சென்றிருந்த அனிலின் பக்கத்து வீட்டுகாரரான பிரகாஷின் மனைவி வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டில் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த கோணிப்பையை கண்டு பிரகாஷின் மனைவி அதை திறந்து பார்த்தபோது, காணாமல் போன சிறுமி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகவறிந்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷை தாக்கயுள்ளனர். எனினும், சம்பவயிடத்திற்கு உடனே விரைந்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

newsminute

குழந்தையின் கழுத்தில் அடையாளம் இருப்பதால் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ள பொலிசார், பிரேத பிரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொலைக்கான நோக்கம் தற்போதுவரை தெரியவில்லை எனவும், குற்றம்சாட்டப்பட்ட பிரகாஷை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பிரகாஷ்க்கு தொடர்பு இருக்காலம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்