24 பேரக்குழந்தைகள் எடுத்த தம்பதி... 100 வயதை கடந்து ஒரேநாளில் உயிரிழந்த சோகம்

Report Print Vijay Amburore in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 வயதை கடந்த தம்பதி ஒரேநாளில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 104 வயதான வெற்றிவேல். இவருக்கு 100 வயதில் பிச்சாயி என்கிற மனைவி இருந்தார்.

இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் மற்றும் 24 பேரக்குழந்தைகள் உள்ளனர். நீண்ட காலமாக விவசாயம் செய்து வந்தே வெற்றிவேல் தன்னுடைய குடும்பத்தை காப்பற்றி வந்தார்.

Puthiya Thalaimurai

வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வெற்றிவேல், இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மற்றும் மகன்கள் மேற்கொண்டிருந்தனர்.

Puthiya Thalaimurai

கணவர் இறந்த துக்கம் தாளாமல் சோகத்திலே இருந்த பிச்சாயி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 100 வயதை கடந்து சாவிலும் பிரியாமல் ஒரேநாளில் உயிரிழந்த தம்பதியினருக்கு, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Puthiya Thalaimurai

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்