விரைவில் சுர்ஜித்தின் தாய்க்கு அரசு வேலை?

Report Print Fathima Fathima in இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சுர்ஜித்தின் தாய் கலாமேரிக்கு விரைவில் அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக திருச்சி மாவட்ட ஆட்சியரான சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சியின் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் நான்கு நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டான்.

ஒட்டுமொத்த தமிழர்களையும் கலங்க வைத்த, இச்சம்பவத்திற்கு பின்னர் பயன்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுவிட்டன.

ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக புகார்கள் வந்தால் 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 12ம் வகுப்பு முடித்துள்ள சுர்ஜித்தின் தாய் கலாமேரிக்க ஏற்ற அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers