இரவில் மனைவியுடன் சண்டை! கழுத்தை அறுத்த கணவன்- ரத்தவெள்ளத்தில் சரிந்த பரிதாபம்

Report Print Fathima Fathima in இந்தியா

சேலத்தில் தன்னுடன் வரமறுத்த மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தின் கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் மோகனேஸ்வரி(வயது 21), இவருக்கும் மன்னார்பாளையத்தை சேர்ந்த கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது, இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

மது பழக்கத்துக்கு கோபி அடிமையாகி இருந்ததுடன் தினமும் குடித்துவிட்டு மோகனேஸ்வரியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்ந்து கொண்டே போக, கோபத்தில் தனது மகனை அழைத்துக் கொண்டு மோகனேஸ்வரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அடிக்கடி கோபி, மோகனேஸ்வரியை சந்தித்து தன்னுடன் வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார், மோகனேஸ்வரிக்கு கோபியுடன் செல்ல இஷ்டமில்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மோகனேஸ்வரியை சந்திக்க சேலத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது வேலை முடிந்து இரவு 9 மணியளவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த மோகனேஸ்ரியை மீண்டும் வருமாறு அழைத்துள்ளார்.

இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மோகனேஸ்வரியின் கழுத்தை அறுத்துள்ளார் கோபி.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மோகனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்