இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள கச்சிக்குடா ரயில் நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நடந்துள்ளது. Hundry விரைவு ரயில் சிக்னலுக்காக நிலையத்திற்கு அருகே நின்றுக்கொண்டிருந்த போது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த உள்ளுர் மின்சார பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான ரயிலுக்குள் சிக்கிய மின்சார ரயில் ஓட்டுநர், 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பத்தில் நம்பப்பட்டாலும், தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் அதற்கான சாத்தியத்தை நிராகரித்துள்ளார்.

மேலும், மோதலுக்கு மனித பிழையை காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தினால், அவ்வழியாக செல்ல வேண்டிய 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்