பள்ளிக்கு சென்ற மாணவி!... சடலமாக வீடு திரும்பிய சோகம்- கதறும் பெற்றோர்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் கரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த், இவரது மகள் கோமதி(வயது 17), அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்ததில் இருந்தே கோமதி சோர்வாக காணப்பட்டுள்ளார்.

உடனே ஆசிரியர் முகம் கழுவிவிட்டு வருமாறு கூறியுள்ளார், மாணவியும் முகம் கழுவிவிட்டு வந்தவுடன் வகுப்பறையின் வாசலிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதை பார்த்ததும் பதறிய ஆசிரியர்கள், மாணவிகள் உடனடியாக கோமதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், கோமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டதாலும், இருதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே எடுத்துச் செல்லும் தமனிசிரையில் ஏற்கெனவே இருந்த பிரச்சினை காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கவும் சடலத்தை எடுத்துச் சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers