வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பில் மனைவியிடம் பேசிய கணவன்... அதன் பின் அவர் செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டிலிருந்து வீடியோ கால் மூலம் மனைவியிடம் பேசிய கணவன் அவரிடம் மிக மோசமாக நடந்து கொண்ட நிலையில் ஊருக்கு திரும்பிய அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜர்னைல் சிங். இவருக்கு ரமன்தீப் கவுர் என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் சில நாட்கள் கழித்து கணவர் குடும்பத்தார் புதுப்பெண் கவுரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு கவுரின் கணவர் ஜர்னைல், போர்ச்சுகல் நாட்டுக்கு வேலைக்கு சென்றார்.

அங்கிருந்து தினமும் அவர் மனைவியுடன் வீடியோ காலில் பேசி வந்தார்.

கடந்த வாரம் வீடியோ காலில் பேசிய போது மனைவி கவுரின் உடைகளை கழட்ட சொன்னார். ஆனால் அதற்கு அவர் மறுத்தும் ஜர்னைல் வலிறுத்தினார்.

இதையடுத்து வேண்டா வெறுப்பாக உடைகளை கவுர் களைந்த போது அதை கணவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொண்டார்.

பின்னர் அந்த புகைப்படத்தை மனைவியிடம் காட்டி கூடுதல் வரதட்சணை கொடுக்கவில்லை என்றால் இதை எல்லோரும் அனுப்பிவிடுவேன் என மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கவுர் நடந்ததை தனது தந்தையிடம் கண்ணீருடன் கூற அவர் பொலிசில் புகார் அளித்தார்.

இந்த சூழலில் ஜர்னைல் வெளிநாட்டிலிருந்து நேற்று ஊருக்கு திரும்பிய நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதோடு அவர் குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்