கமலேஷ் திவாரி கொலை.. பிரேத பரிசோதனையில் வெளியான பயங்கரமான விவரங்கள்

Report Print Basu in இந்தியா

கமலேஷ் திவாரி கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கையிலிருந்து பயங்கரமான விவரங்கள் வெளிவந்துள்ளன.

இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி அக்டோபர் 18 ம் திகதி லக்னோவில் உள்ள நாகா ஹிந்தோலா பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பில் தற்போது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது, கமலேஷ் திவாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், அவர் 15 முறை குத்தி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

குத்தல்கள் அனைத்தும் தாடைகள் முதல் மார்பு வரை உடலின் மேல் பகுதியை மையமாகக் கொண்டிருந்தன. அனைத்து காயங்களும் ஒருவருக்கொருவர் 10 செ.மீ க்குள் ஏற்படுத்தப்பட்டன. கழுத்தில் இரண்டு ஆழமான வெட்டு, தொண்டையை அறுக்க முயற்சிக்கப்பட்டது என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

தாக்குதலில் அவர் இறந்ததை உறுதிப்படுத்த தாக்குதல்காரர்கள் அவரை ஒரு முறை முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளனர். கமலேஷ் திவாரி உடலில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் மண்டை ஓட்டின் பின்புறத்தில் தோட்டாவைக் கண்டுபிடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

indiatoday

indiatoday

சம்பவத்தன்று, அவரது இந்து கட்சிக்காக பணியாற்றுவதற்கான போலிக்காரணத்தை கூறி கமலேஷ் திவாரி-யை சந்திக்க தாக்குதல் நடத்தியவர்கள் வந்திருந்தனர் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்