ஒரே குடும்பத்தில் ஆறு பேரை கொன்ற பெண்! அவளின் உண்மை முகம் குறித்து விவரித்த தோழி

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்த ஜோலி மிகவும் அமைதியானவர் என்றும் அவர் இப்படி செய்தார் என்பதை நம்பமுடியவில்லை எனவும் அவர் தோழி கூறியுள்ளார்.

கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்துள்ளார்.

ஜோலியின் வழக்கு கேரளாவை உலுக்கியுள்ள நிலையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

ஜோலிக்கு பெண் குழந்தைகள் என்றாலே பிடிக்காதாம். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தான் கர்ப்பமடையும் போது என்ன குழந்தை என முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஜோலி அது பெண்ணாக இருந்தால் கலைத்துவிடுவாராம், இப்படி இரண்டுக்கும் அதிகமான முறை கருவை கலைத்துள்ளார்.

இந்நிலையில் ஜோலி குறித்து அவர் தோழி லில்லி கூறுகையில், ஜோலி மிகவும் அமைதியானவர்.

எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். தினமும் காலையில் கச்சிதமாகத் தயாராகி கல்லூரி செல்வதாகக் கூறிவிட்டு தன் காரில் புறப்பட்டுவிடுவார். மாலையில்தான் வீடு திரும்புவார்.

ஆனால் அவர் கல்லூரி பேராசியையாக வேலை செய்தேன் என பொய்யாக கூறியது வியப்பை தருகிறது.

அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாள் கூட நானும் அவரும் ஒரு தியான மையத்துக்குச் சென்றிருந்தோம். அப்போது, ஜோலியின் முதல் கணவர், ராய் மரணம் தொடர்பான விசாரணை பற்றி அவரிடம் கேட்டேன்.

எந்தவித பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக என்னிடம் பதில் கூறினார்.

அவர் கைது செய்யப்பட்ட பிறகுதான் ஜோலியின் உண்மையான முகம் தெரிந்தது என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்