சசிகலா சிறைச்சாலையில் அதிரடி சோதனை... சிக்கிய செல்போன்-கத்திகள்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா லஞ்சம் கொடுத்து அறையில் சலுகைகளை அனுபவித்தது உண்மை என்று விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு பரப்பான அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, சிறை விதிகளை மீறியதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறையில் சலுகைகளை சசிகலா அனுபவித்தது உண்மை தான் என்று கூறப்பட்டுள்ளது.

சிறைத் துறை அதிகாரியாக இருந்த சத்யநாரயண ராவ் ரூபாய் 2 கோடி லஞ்சம் பெற்று, சசிகலாவுக்கு சலுகைகளை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இரவு உடையில் சசிகலா சிறையை விட்டு வெளியேறியதற்கான சிசிடிவி காட்சிகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலா இருந்த சிறைச்சாலையில் திடீரென்று இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது பட்டன் கத்தி, சூரி போன்ற 37 ஆயுதங்களும் கஞ்சா, செல்போன் மற்றும் சிம் கார்டுகள் போன்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் சசிகலாவின் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்பு தான் சசிகலா சிறையில் சலுகைகளை பெறுவதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இதையடுத்து தற்போது சசிகலாவின் அறையில் இருந்து அலைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டதால் இது குறித்து சிறை துறை அதிகாரி கூறுகையில், இது வழக்கமான ரெய்டு தான், சிறைசாலையில் பலர் விதிமுறைகளை மீறி பொருட்கள் வைத்திருப்பதாக கூறப்பட்டது.

அதன் படியே ரெய்டு நடத்தினோம், ஆனால் சசிகலாவிடம் செல்போன் கைப்பற்றப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்