பிஞ்சு குழந்தைகள் மூவரை கால்வாயில் வீசி விட்டு தற்கொலைக்கு முயன்ற தாயார்: வெளிவந்த பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் மீராளூரில் 3 பெண் குழந்தைகளை பெற்ற தாயே கால்வாயில் தூக்கி வீசி கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீராளூர் பகுதியில் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - சத்தியவதி தம்பதிக்கு 3 மகள்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வழக்கம்போல சண்டையின்போது கணவரிடம் கோபித்துக் கொண்டு 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு கீழமணக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சத்தியவதி புறப்பட்டுள்ளார்.

வழியில் மீராளூரில் பேருந்தில் இருந்து இறங்கிய சத்தியவதி மகள்களுக்கு திண்பண்டம் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து 3 மகள்களையும் கால்வாயில் தூக்கி வீசியதாகத் தெரிகிறது. பின்னர் சத்தியவதி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் சத்தியவதியை கைது செய்துள்ளனர்.

கால்வாயில் வீசப்பட்ட 3 பேரில் 6 வயது அட்சயா, 5 வயது நந்தினி ஆகியோர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது 2 வயது சிறுமி தர்ஷிணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்னை காரணமாக குழந்தைகளை கால்வாயில் வீசிவிட்டு சத்தியவதி தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers