கனடா நாட்டவரிடம் பண மோசடி செய்தேனா...? விஜய்-ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் விளக்கம்

Report Print Abisha in இந்தியா

மணிமாறன் என்பவர் காலவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பண மோசடி செய்துவிட்டார் என்று அளித்த புகாருக்கு அவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரின் கிரீன் சிக்னல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “2018-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரின் தயாரிப்பில் டிராபிக் ராமசாமி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தை கனடா நாட்டைச் சேர்ந்த பிரமானந்த் சுப்பிரமணியன் என்பவர் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றிருந்தார். இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தமும் போட்டிருந்தார். ஆனால் அதன்படி அவரால் பணத்தை வழங்க இயலவில்லை.

பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு படம் வேண்டாம் கூறிவிட்டார். அதனால் வியாபாரம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவறினோம். அப்போதெல்லாம் படம் வெளியிடும் திகதியை தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்யும் என்பதால், படத்தை தள்ளி வைக்க இயலவில்லை.

ஆதனால் கடைசி நேரமானதால் படத்தை வாங்க யாரும் முன்வரவும் இல்லை. இதனால் எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழகமெங்கும் வெளியிட்டு கோடிகணக்கில் நஷ்டத்தை சந்தித்தார்.

ஆனால் இந்தப் படத்தை வாங்குவதற்கோ வெளியிடுவதற்கோ எந்த தொடர்புமே இல்லாத மணிமாறன் காவல் ஆணையர் அலுவலகத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று புகார் அளித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் புகழை கெடுக்கவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவும் திட்டமிட்டு செயலாற்றியிருக்கின்றனர்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்