பரபரப்பான சாலையில் அரைநிர்வாணம்.... புகைப்படம் எடுத்த மக்கள்: அதிரவைத்த 13 பேர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறையை உடைத்து ரவுடியை தப்பிக்க வைத்ததாக கூறி அவரது கூட்டாளிகள் 13 பேரை பொலிசார் அரைநிர்வாணமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த 13 பேரையும் சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச்சென்ற பின்னர் அவர்களை வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தில் தனது கூட்டாளிகளுடன் கொலை, கொள்ளை எனப் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் விக்ரம் குஜ்ஜார்.

இந்தக் கூட்டத்தின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க விக்ரம் குறித்த தகவல் தெரிவித்தால் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஹரியானா காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் மற்றொரு வழக்கில் ராஜஸ்தான் காவல்துறையினரால் செப்டம்பர் 5 ஆம் திகதி விக்ரம் கைது செய்யப்பட்டார்.

மேலும் அல்வார் பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்தில் அவர் சிறைவைக்கப்பட்டார். நள்ளிரவில் 15 பேர் கொண்ட கும்பல் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

காவல்நிலையத்திற்குள் புகுந்த கும்பல் சிறை வைக்கப்பட்டிருந்த விக்ரமை மீட்டுச் சென்றது.

இதையடுத்து இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. ஒரு மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அந்தக் கும்பலை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறையை உடைத்து விக்ரமை தப்பிக்க வைத்ததாக அவரது கூட்டாளிகள் 13 பேர் கைதாகியுள்ளனர். பரபரப்பான மார்க்கெட் பகுதிகளில் அந்த 13 நபர்களையும் அரை நிர்வாணக் கோலத்தில் காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

சுமார் 2 கி.மீ தூரம் அழைத்துச்சென்ற பின் அவர்களை வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதற்காக சுமார் 100க்கும் அதிகமான காவலர்கள் மார்க்கெட் பகுதியில் அணிவகுத்தனர்.

சாலையில் சென்றவர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்