பட்டப்பகலில் நடந்த பயங்கரம்... ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடியில் பட்டப்பகலில் பள்ளி மாணவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமன்யு. பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த இவர், வழக்கம்போல மதிய உணவு சாப்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது நான்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அபிமன்யுவின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுப்பதை பார்த்த அபிமன்யு, இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளான்.

தொடர்ந்து விரட்டி சென்ற அந்த கும்பல், அபிமன்யுவின் கழுத்து மற்றும் தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிபடுகொலை செய்துள்ளனர். அபிமன்யு இறந்ததை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அபிமன்யுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கொலைச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்