பொண்டாட்டியை சேர்த்து வைங்க.... கழுத்தில் வெடிகுண்டுடன் பெரும் அதிர்ச்சி கொடுத்த மருமகன்!

Report Print Vijay Amburore in இந்தியா

மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என கழுத்தில் வெடிகுண்டுடன் மருமகன் வந்துள்ள சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவருடைய மாமியார் தன்னுடைய மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

மாமியார் தான் மனைவியை தன்னிடம் இருந்து பிரித்ததாக கோபத்தில் இருந்த மணிகண்டன் கழுத்தில் வெடிகுண்டுடன், உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு மாமியாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமியார் வீட்டிற்கு வெளியில் வந்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது அந்த வழியாக சென்றுகொண்டிருந்த பாலசந்திரன் என்கிற பொலிஸ்காரர், நடந்தவை குறித்து கேட்டறிந்து, மணிகண்டனிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரத்தை கடந்தும் கூட மணிகண்டன் சமாதானம் ஆவதாக தெரியவில்லை.

பின்னர் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்து வந்த அதிகாரிகள், நீண்ட நேரம் முயற்சித்து பார்த்தனர். ஆனால் மணிகண்டன் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. 'மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள்' என்று மட்டும் கூறிக்கொண்டே இருந்துள்ளார்.

கடைசியில் வேறு வழியில்லை என்பதை உணர்ந்த பாலச்சந்திரன், மணிகண்டனின் இரண்டு வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார். உன் குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம் என பாலசந்திரன் மிரட்ட, இதனை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் வேகமாக ஓடிவந்து குழந்தையை வாங்கினார்.

உடனே பொலிஸார் அவரது கழுத்தில் இருந்த குண்டுகளை அகற்றிவிட்டு, உடலில் தண்ணீரை ஊற்றி நிலையை கட்டுக்குள் கொண்டுவந்ததாக நினைத்தனர்.

ஆனால் அந்த சமயத்தில் மணிகண்டன், ஏற்கனவே விஷத்தை சாப்பிட்டுவிட்டேன் எனக்கூறி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொள்ள மணிகண்டன் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில் பொலிஸாருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்