தமிழகத்தை உலுக்கிய சுபஸ்ரீ மரணம் விதியால் நடந்தது! சர்ச்சையை ஏற்படுத்திய விஜயகாந்த் மனைவி பிரேமலதா

Report Print Raju Raju in இந்தியா

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது விதி என பிரேமலதா பேசியுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமூகவலைதளத்தில் கண்டங்கள் குவிந்து வருகிறது.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது.

இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லொறி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவத்துக்கு பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் தான் காரணம் என எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளரும் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா, பேனர் தடையை முதலில் ஏற்றுக்கொண்ட கட்சி தேமுதிக.

பேனர் கட்டுவதால் உயிர் போகிறது என்றால் பேனர் வேண்டாம். சுபஸ்ரீ உயிர் இழப்பு எதிர்பாராத நிகழ்வு.

சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததும், லொறி அங்கு வந்ததும் விதி. அதிமுக பேனர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் இதனை பெரிதுபடுத்தியுள்ளார் என கூறினார்.

பிரேமலதா இவ்வாறு பேசியதற்கு சமூகவலைதளத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பலரும், நீங்கள் இப்படி பேசுவது கேவலம் எனவும் இப்படி பேசி விஜயகாந்த் பெயரை கெடுக்காதீர்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்