மனைவியை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியெறிந்த கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை துண்டு துண்டாக கணவன் வெட்டி வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த அஷூ (31), கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக சீமா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அஷூ கம்யூட்டர்களை பழுதுபார்க்கும் பணி செய்து வந்தார். சமீபத்தில் தங்களுடைய சொந்த வீடு பழமை அடைந்துவிட்டதால், நகர்புறத்தில் புதிதாக ஒரு வாடகை வீட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பழைய வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வருவதற்காக அஷூ, தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஷூ, சீமாவை தாக்கியுள்ளார் . இதில் சீமா சுயநினைவிழந்ததை அடுத்து, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய உடலை துண்டுகளாக நறுக்கி, தலை மற்றும் கை, கால்களை மட்டும் கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார். மற்ற பாகங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்.

அதன்பிறகு சீமாவின் தாய்க்கு போன் செய்து, உங்களுடைய மகளை கொலை செய்துவிட்டேன் எனக்கூறிவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார், அஷூ கூறிய இடத்தில் இருந்து சீமாவின் உடலை கைப்பற்றினர்.

இதுகுறித்து சீமாவின் தாய் கூறுகையில், ஆண் குழந்தைகளே பிறக்காததால் அஷூ என்னுடைய மகள் மீது கடும் கோபத்தில் இருந்தார் என கூறியுள்ளார்.

அதேசமயம் அஷூ பொலிஸாரிடம் கூறுகையில், சீமா ஆண் நண்பருடன் தொடர்பு வைத்திருந்ததால் எங்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதனைப்பற்றி கேட்கும்போதெல்லாம், நான் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்தியதாக பொலிஸில் புகார் கொடுத்துவிடுவேன் என சீமா மிரட்டி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்