சோமேட்டோ மோசடி: 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு.. மொத்த பணத்தையும் இழந்த பொறியாளர்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் சோமேட்டோ app-ல் உணவு ஆர்டர் செய்த நபர், அவரது வங்கிக் கணக்கில் இருந்து அனைத்து பணத்தையும் இழந்த மோசடி அரங்கேறியுள்ளது.

பாட்னாவை சேர்ந்தவர் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஷ்ணு, இவர் சோமேட்டோ app-ல் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவுடன் டெலிவரி பையன் வீட்டுக்கு வந்தபோது, உணவு தரத்தில் திருப்தியடையாத விஷ்ணு, திரும்பி எடுத்துச் செல்லும் படி கோரியுள்ளார்.

அதற்கு பதிலாக சோமேடோ வாடிக்கையாளர் சேவையை அழைக்குமாறு டெலிவரி பையன் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்த, இணையத்தில் வாடிக்கையாளர் சேவை எண்ணை கண்டறிந்த விஷ்ணு, சோமேடோவை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். எனினும், யாரும் அந்த அழைப்பை ஏற்கவில்லை.

சிறித நேரம் கழித்து விஷ்ணுவின் தொலைபேசிக்கு அழைத்த நபர், தான் சோமேடோவிலிருந்து பேசுவதாக கூறியுள்ளார். 100 ரூபாய் திருப்பி செலுத்துவதாகவும், அதற்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

பின்னர் விஷ்ணுவுக்கு ரூ .10-ஐ டெபாசிட் செய்ய ஒரு இணைப்பை அந்த நபர் அனுப்பியுள்ளார். நடைமுறை குறித்து சற்றும் சிந்திக்காத பொறியாளர் விஷ்ணு இணைப்பைக் கிளிக் செய்து ரூ .10 டெபாசிட் செய்துள்ளார்.

இந்த பரிவர்த்தனை முடிந்த சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து பல பரிவர்த்தனைகள் மூலம் மொத்த பணமான ரூ .77,000 எடுக்கப்பட்டுள்ளது.

பல Paytm பரிவர்த்தனைகள் மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 10ம் திகதி நடந்துள்ளது. பின்னர் விஷ்ணு காவல்துறை, வங்கிகள் மற்றும் பலரை அணுகியுள்ளார். எனினும், தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்