மதுவுக்கு அடிமையாகி தந்தை செய்து வந்த மோசமான செயல்.... மகள் எடுத்த அதிரடி சபதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தந்தை திருந்துவதற்காக மகள் அவருக்கு போட்ட வித்தியாசமான நிபந்தனை குறித்த பின்னணி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு திருமணமாகி விவேகாநந்தன் என்ற மகனும், நதியா என்ற மகளும் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான சிவக்குமார் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்தார்.

இதனால் மனவேதனையடைந்த அவர் மகள் நதியா தந்தையுடன் பேசுவதையே கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தியுள்ளார்.

தன்னுடன் பேசுமாறு சிவக்குமார் எவ்வளவு கூறியும் வைராக்கிய குணமுடன் சபதம் எடுத்ததை நதியா மீறவில்லை.

ஆறுமாதங்கள் கழித்து மனப்புழுக்கத்தில் இருந்த சிவக்குமார் மகளிடம், நீ என்னிடம் பேச வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

அதற்கு, தனது பள்ளிக்கு பின்னால் உள்ள குளம்‌ மாசடைந்து காணப்படுவதால், தனக்கும் தன்னுடன் பயில்வோருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என கூறிய நதியா அந்தக் குளத்தை தூர்வாரிக் கொடுத்தால் உங்களுடன் பேசுவேன் என்று த‌ந்தையிடம் கூறினார்.

நவீன ‌உலக பெண் குழந்தைகள் எதை எதையோ கே‌ட்கும் இக்காலக்கட்டத்தில், நதியாவின் உயரிய சிந்தனையை எண்ணி சிலிர்த்‌துப்போனார் சிவக்குமார்.

இதையடுத்து மகளின் அன்புக் கட்டளைக்கு பணிந்த சிவக்குமார், சர்வதேச மகள்கள் தினத்தில் உணவைக்‌கூட‌ தவிர்த்து,‌ நதியாவின் மேற்பார்வையிலேயே குளத்தை தூய்மைப்படுத்தினார்.

இதோடு இனி மது அருந்துவதை கைவிடுவதுடன், வீட்டில் மனைவியுடன் சண்டையிடப் போவதில்லை எனவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்