வீட்டில் தூங்கி கொண்டிருந்த தம்பதி! உள்ளே புகுந்த ஆண் மனைவியிடம் செய்த செயல்.. கணவன் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மனைவியிடம் தகாத முறையில் நடந்த லொறி ஓட்டுனரை கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தின் அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். லொறி ஓட்டுனர்.

அதே ஊரை சேர்ந்தவர் மணிமோகன். நேற்று முன்தினம் இரவு மணிமோகனும் அவரது மனைவி செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து விஜயகுமார் மணிமோகனின் மனைவியை தட்டி எழுப்பி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.

இதை கண்டு பதறிய செல்வி சத்தம் போட்டுள்ளார், அப்போது கண்விழித்து மணிமோகன் பார்த்த போது அதிர்ச்சியடைந்து, விஜயகுமாரை பிடிக்க நினைப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிமோகனும் அவரது நண்பர்களும் விஜயகுமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்த விஜயகுமாரை மணிமோகன் மற்றும் அவரின் மூன்று நண்பர்கள் சேர்ந்து பிடித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலை குலைந்து ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தார்.

அதோடு விடாமல் அவர்கள் வாயில் வி‌ஷத்தை ஊற்றிய விஜயகுமார் பைக்கை அவரது கழுத்தில் ஏற்றினர். இதில் சிறிது நேரத்தில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிறகு அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜயகுமார் சடலத்தை கைப்பற்றினார்.

இந்த கொடூர கொலையில் தலைமறைவாக உள்ள மணி மோகன் மற்றும் சதிஸ்குமார் பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்