‘திருமணம் செய்துகொள்வது தான் விவாகரத்துக்கு காரணம்'.. நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

Report Print Kabilan in இந்தியா

வாகன உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்ததைத் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பொருளாதார மந்தநிலை குறித்து பேட்டியளித்தார். அப்போது வாகன உற்பத்தித் துறை வீழ்ச்சி கண்டுள்ளது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், மக்கள் கார்களை வாங்குவதைத் தவிர்த்து ஓலா, ஊபர் ஆகியவற்றில் பயணிப்பதும் வாகன உற்பத்தித் துறை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று பதிலளித்தார்.

இதனை வைத்து நெட்டிசன்கள் அவரை மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர். குறிப்பாக, ‘விவாகரத்து அதிகமாவதற்கு காரணம் மக்கள் திருமணம் செய்து கொள்வதுதான்’, ‘மக்கள் ஆடைகள் அணிவதால் தான் ஆடைகள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

காபி குடிப்பதால் தான் தேநீர் விற்பனை தொழில் பாதித்துள்ளது’ என்று அவர் கூறியதுபோல் பல வாசகங்களை பதிவிட்டு, அவற்றை ட்விட்டரில் #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்