பள்ளி சிறுவனின் முன் அநாகரிகமாக நடந்த ஆசிரியர் - சுவர் ஏறி தப்பிய பெண்.. சிக்கிய ஆசிரியரை உரித்த பொதுமக்கள் !

Report Print Abisha in இந்தியா

நாமக்கல் மாவட்டத்தில், காதலியை தப்பிக்கவிட்டு ஆசிரியர் அடிவாங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்த சரவணனும், அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிவந்த ஜெயந்தி என்பவரும் தவறான முறையில் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் பள்ளியினுள் தனியாக நெருக்கமாக இருந்ததை சிறுவன் ஒருவன் பார்த்து வீட்டில் சென்று கூறியுள்ளான். உடனே கிராம மக்கள் ஒன்றிணைத்து கையும்களவுமாக பிடிக்க பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எங்கும் இல்லை என்று தேடியபோது, இருவரும் கழிவறையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

சரணவனன் பொதுமக்கள் கூடியிருப்பதை பார்த்து கழிவறை சுவர் வழியாக ஜெயந்தியை சுவர் ஏறி குதித்து தப்பிக்க உதவியுள்ளார். பின் வெளியில் வந்த சரவணனை பொதுமக்கள் இணைந்து அடித்தனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறித்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் சிறுவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களின் நடிவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்