38 வயதில் 20 முறை கர்ப்பம்...16 பிள்ளைகளுக்கு தாயார்: வியப்பில் ஆழ்த்திய பெண்மணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பெண்மணி ஒருவர் தமது 38-வது வயதில் 20-வது முறையாகக் கருத்தரித்திருக்கும் தகவல் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தின் பீட் பகுதியை சேர்ந்தவர் லங்காபாய் காரத். இவருக்கு இதுவரை 16 பிள்ளைகள் பிறந்திருக்கின்றன.

மூன்று முறை கருச்சிதைவும் ஏற்பட்டிருக்கிறது. மூன்று மாத கர்ப்ப காலத்தில்தான் மூன்று முறையும் கருச்சிதைவு நிகழ்ந்துள்ளது. அவருக்குப் பிறந்த 16 குழந்தைகளில் 11 குழந்தைகள் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர்.

தற்போது 20-வது முறையாக 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் லங்காபாய் காரத்.

லங்காபாய் சார்ந்துள்ள இனத்தினரின் வாழ்வாதாரம் என்பது தினக்கூலியாக சிறிய வேலைகளைச் செய்வது, பிச்சையெடுப்பது ஆகிய தொழில்களே.

இதனால் அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குக் குடிபெயர்ந்துகொண்டே இருப்பார்கள்.

இதனால் தான் லங்காபாய் சுகாதாரத்துறையினரால் கண்டறியப்படாமல் இருந்து வந்துள்ளார்.

தற்போது அவர் கண்டறியப்பட்டு, தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லங்காபாய் இதுவரை மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டதே இல்லை. வீட்டில்தான் அனைத்துப் பிரசவங்களும் நடைபெற்றிருக்கின்றன. `

ஒரு பெண்ணின் கர்ப்பப்பை என்பது தசைகளால் ஆனது. ஒவ்வொரு முறை பெண் கருத்தரிக்கும்போதும் அந்தத் தசை தளர்வடைவதோடு வலுவிழக்கவும் செய்யும்.

மீண்டும் மீண்டும் கருத்தரிக்கும்போது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்' என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனாலையே இந்தமுறை லங்காபாயை பிரசவ காலத்தில் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்