நண்பரின் 3 வயது மகளை கொன்ற கொடூரன்.. டைரியில் இருந்த அதிர வைக்கும் வாக்கியம்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மும்பை நகரில் நண்பரின் மகளை மாடியிலிருந்து வீசிக் கொன்ற கொடூரன், நரபலி கொடுக்கும் நோக்கில் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கடந்த சனிக்கிழமை அனில் சவுகானி என்ற நபர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த 3 குழந்தைகளை விளையாட தன்னுடன் அழைத்துச் சென்ற அனில், 3 வயதான ஷனயா எனும் குழந்தையை 7வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார்.

அந்த குழந்தை கீழே நின்றிருந்த கார் ஒன்றின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து, குழந்தை தானே தவறி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் தானே குழந்தையை சேர்த்ததாகவும் அனில் சவுகானி பொலிசுக்கு தகவல் தெரிவித்தார்.

எனினும், பொலிசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தையை கொன்றதை அவர் ஒப்புக் கொண்டார். மேலும் விசாரணையில் அனில் சவுகானி கூறியது பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

மொராக்கோவில் உள்ள பெண் ஒருவர், இரட்டைக் குழந்தைகளை பலி கொடுத்தால் வாழ்வில் உள்ள பிரச்னைகள் எல்லாம் தீரும் என்று அனில் சவுகானியிடம் கூறியுள்ளார். அதனை நம்பிய அனில், தனது நண்பரின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான ஷனயாவை இவ்வாறு கொலை செய்துள்ளார்.

மேலும், அவரது டைரியில் ‘உன் வாழ்க்கையைக் காத்துக் கொள்ள இரட்டையர்களைக் கொலை செய்’ என எழுதப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்