கடைசி நொடியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு!.. தமிழகத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்களால் பரபரப்பு

Report Print Basu in இந்தியா

தமிழ்நாட்டில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே பயணித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கட்பாடிக்கு அருகே ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், கடைசி நிமிடத்தில் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் ரயிலும், அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக வந்துள்ளது.

எனினும், லோகோ பைலட்டின் சாதுர்யமான செயல்பட்டால் இரு ரயில்களும் 100 மீட்டர் தொலைவில் நிறத்தப்பட்டு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து புறநகர் ரயிலில் இருந்த ஏராளமான பயணிகள் கீழே இறங்கி காத்திருக்கின்றனர். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், மாற்று ஏற்பாடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...