தோல்வியில் முடிந்த சந்திரயான் 2: பெரும் கவலையில் இந்தியா

Report Print Arbin Arbin in இந்தியா

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் லேன்டர் விக்ரமிடமிருந்து தகவல் வராததால் அது தோல்வியில் முடிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.

புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 14 ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.

அதன்பிறகு படிப்படியாக 5 முறை ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

கடந்த 2 ஆம் திகதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்க தொடங்கியது.

3 ஆம் திகதி மற்றும் அதற்கு மறுதினம் என்று 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது.

இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை அதிகாலையில் நடந்தது.

சந்திரயான்-2 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கியநிலையில் அதிலிருந்து தகவல் எதுவும் வரவில்லை.

இதனால் இந்தியாவின் சந்திரயான் 2 முயற்சி தோல்வியில் முடிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்