3 மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை! கடிதத்தில் எழுதியிருந்த கண்கலங்க வைக்கும் காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மூன்று குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து தாய் தற்கொலை செய்து சமப்வம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன் (36). இவர் அங்குள்ள எஸ்டேட்டில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவருக்கு வனிதா(34) என்ற மனைவியும் அபிக்‌ஷா(13), அனுஸ்ரீ(10), அக்‌ஷதா (8) என மூன்று மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் முருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, வீட்டில் வனிதாவிடம் தகராறு செய்வதை பழக்கமாக கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அதே பகுதியில் வனிதாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனால் இது குறித்து வனிதா கண்டித்தும் அவர் கேட்கவில்லை, இதனால் மிகுந்த வேதனையில் இருந்த வனிதா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

நாம் இறந்துவிட்டால், குழந்தைகள் அனாதையாகிவிடும், கணவர் சரியாக பார்த்து கொள்ளமாட்டார் என்று, பாலில் விஷம் கலந்து முதலில் மூன்று குழந்தைகளை குடிக்க வைத்து, அதன் பின் தானும் குடித்து கொண்டார்.

சிறிது நேரத்திலே நால்வரும் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர். இதைக் அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து நான்கு பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், வனிதா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வனிதாவின் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு கடிதம் சிக்கியுள்ளது,

அந்த கடிதத்தில், நான், எனது குழந்தைகள் மரணத்திற்கு எனது கணவர் முருகன் மற்றும் அவர் தொடர்பு வைத்திருந்த பெண் தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து வனிதாவின் தாய் கொடுத்த புகார் பேரில் முருகன் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்