தற்கொலை செய்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்... இறுதி நேரத்தில் நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ள ஆக்ரோஷமாக கிளம்பிய பெண்ணிடம் பொலிசார் அரை மணி நேரத்துக்கு மேல் போனில் சமாதானமாக பேசி அவரின் முடிவை மாற்றியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி ரோகிணி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் தாமோதரன் மனைவி ரோகிணியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த ரோகிணி இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக தாய் சுப்புலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் கூறிவிட்டு நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி அணைக்கு சென்றார்.

அதைக்கண்டு பதறிப்போன சுப்புலட்சுமி உடனே பொலிசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிசார் ரோகிணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அரை மணி நேரத்திற்கு மேலாக பேசி சமாதானம் செய்து கொண்டே அணைப்பட்டிக்கு சென்று ரோகிணியை கண்டுபிடித்து அறிவுரைகளையும் கூறி தற்கொலை செய்து கொள்ளும் திட்டத்தை கைவிட செய்தனர்.

அதோடு ரோகிணியையும் குழந்தைகளையும் காவல்நிலயத்திற்கு அழைத்து வந்து ரோகிணியின் கணவர் தாமோதரனை வரவழைத்து இருவருக்கும் அறிவுரைகளை வழங்கி இருவரையும் சேர்த்து வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்ய சென்ற பெண்ணை காப்பாற்றி கணவருடன் சேர்த்து வைத்த பொலிசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்