ரொம்ப முடியாம இருக்கேன்... சீமான் சார் தயவுசெஞ்சு நீங்க தான் உதவ வேண்டும்: கண்ணீர் விட்டு கதறிய நடிகை

Report Print Basu in இந்தியா

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் உதவி கோரி நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினகாந்திடம் உதவி கேட்டு நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். சில தினங்களுக்கு பிறகு ரஜினி தன்னை தொடர்புக்கொண்டு பேசிய உதவி செய்ததாக மற்றொரு வீடியோ பதிவிட்டார்.

பின்னர், சீமான் ஆதவாளர்கள் தன்னை தவறாக சித்தரித்து எழுதுவதை நிறுத்தும் படி சீமானுக்கே கோரிக்கை விடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் உதவி கோரியுள்ளார்.

வீடியோவில் அவர் பேசியதாவது, கர்நாடக மண்ணில் எனக்கு பல அட்டுழியங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. நான்கு, ஐந்து மருத்துவமனை என உயிருக்கு போராடினேன்.

பலரிடம் நான் உதவி கேட்டு அனுகினேன், ஆனால், எனக்கு நிகழ்த்தப்பட்ட அட்டுழியங்களுக்கு குரல் கொடுக்கவும், உதவும் யாரும் முன்வரவில்லை. இறுதியாக உங்களிடம் என் பிரச்னையை முன்வைக்கிறேன்.

தமிழ் பெண் என்ற தகுதியுடன் இந்த பிரச்னையில் தலையிட்டு எனக்கு உதவி செய்ய வேண்டும். தமிழ்-கன்னடம் என பயந்து பேசுபவர்கள் வேண்டாம். எனக்கு நடந்தது போல் அநியாயம் யாருக்கு நடந்தது கிடையாது.

எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை, கர்நாடகத்தில் ஒரு தமிழ் பெண், தமிழ் நடிகைக்கு நடந்த அட்டூழியத்திற்கு எந்த நடிகர் சங்கமும் இதில் தலையிடவில்லை. அனைவரும் இதை முடிமறைக்கவே முயற்சி செய்கின்றனர்.

அநியாயத்தை தட்டி கேட்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை என நான் அறிந்துக்கொண்டேன். சிகிச்சைக்கு என்னிடம் 1000 ரூபாய் கூட இல்லை, அனைவரும் போனில் கிண்டல் செய்கின்றனர், எனக்கு யாரும் கிடையாது.

தயுவுசெய்து சீமான் சார் நீங்க தான் என்னை பிரச்னைக்கு தீர்வளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்