கணவனை இழந்து விதவையான பெண்... வேறு நபரை நம்பி அவருடன் பைக்கில் சென்ற இடத்தில் நடந்த பயங்கரம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விதவை பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த நபர் பொலிசில் வசமாக சிக்கியுள்ளார்.

உசிலம்பட்டியை சேர்ந்தவர் உமாதேவி (45). இவர் கணவர் திராவிடமணி சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த உமாதேவி காய்கறி வியாபாரம் செய்து பிள்ளைகளை காப்பாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தெரிந்த நபரிடம் பணம் வாங்கி வருவதாக பிள்ளைகளிடம் கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

நேற்று காலை உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக் எதிரே உள்ள மொட்டைமலையில், உமாதேவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் மகாலிங்கம் (50) என்பவர் அவரை கொன்றது தெரிந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், மகாலிங்கத்திற்கு உமாதேவி கடன் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், வீட்டிற்கே சென்று பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்துள்ளார்.

பின்னர் பணம் தருவதாகக கூறி அவரை பைக்கில் தன்னுடன் வர சொன்னர்.

உமாதேவியும் நம்பி அவருடன் சென்ற நிலையில் மொட்டைமலை பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.

அங்கு தான் வைத்திருந்த கத்தியால், உமாதேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு போனது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்