தாயின் சேலையை பள்ளிக்கு மறைத்து எடுத்து வந்த மாணவி.. செய்த விபரீத செயல்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் அர்ச்சனா(16) அதே பகுதியில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்த மாணவி அர்ச்சனா, இன்று காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு சென்றுள்ளார். மற்ற மாணவிகள் வருவதற்கு முன்பே பள்ளிக்கு அவர் சென்றதால், வகுப்பறையிலேயே சேலையால் அங்கிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், உடனடியாக பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து தெரிவித்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தை குற்றம்சாட்டி சடலத்தை எடுத்துச்செல்ல விடாமல் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவியின் பெற்றோருடன் பொலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் நடந்த முதற்கட்ட விசாரணையில், மாணவி அர்ச்சனா வீட்டில் இருந்து வரும்போதே தற்கொலை முடிவுடன், தனது தாயாரின் சேலையை புத்தகப்பையில் மறைத்து எடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இந்த சோக சம்பவத்தால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவி தற்கொலை குறித்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவல்களில், அர்ச்சனா அதே பகுதியில் உள்ள ஒரு இளைஞருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த விடயம் அர்ச்சனாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மனவேதனையில் இருந்த மாணவி அர்ச்சனா, ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமலும், யாருடனும் பேசாமலும் இருந்துள்ளார். இந்நிலையில் தான், பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சி இருப்பதாகவும் அதற்காக சேலை வேண்டும் என்றும் தனது தாயிடம் கேட்டு வாங்கி சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு முன்பே சென்ற அவர், வகுப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. எனினும், இச்சம்பவம் குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சக தோழிகளிடமும் பொலிசார் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்