சென்னையில் உயிருடன் தீயில் கருகிய பள்ளி ஆசிரியை... வலி தாங்காமல் துடித்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பள்ளி ஆசிரியை உயிரிழந்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர் அருகே உள்ள எர்ணாவூரை சேர்ந்தவர் யாபேஸ் (35). இவரது மனைவி ஜெபா (32). பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு நெல்சன் (4) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெபா தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பள்ளி சம்பந்தமான வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டதால் மெழுகுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு அந்த வெளிச்சத்தில் வேலை செய்தார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மெழுகுவர்த்தி அறையில் அருகில் இருந்த மண்எண்ணெய் கேன் மீது தவறி விழுந்தது. மண்எண்ணெயில் தீப்பற்றி கொண்டதில் கேன் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில், ஆசிரியை ஜெபா மீது தீப்பற்றி கொண்டது.

இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.

அவரது சத்தத்தை கேட்டு அதிர்ச்சியுடன் ஓடி வந்த யாபேஸ், மனைவி உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றார்.

இதில் அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் தீயில் சிக்கி கருகிய ஜெபா பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த தீக்காயம் அடைந்த யாபேஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஜெபா உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்