7 பேர் விடுதலை.. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றோடு ஓர் ஆண்டு.. அற்புதம்மாள் வேதனை

Report Print Basu in இந்தியா

7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றோடு ஒரு அண்டுகள் முடிந்து விட்டதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கவலை தெரிவித்துள்ளார்.

2018ம் ஆம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, செப்டம்பர் 9ம் திகதியன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

Image result for பேரறிவாளன் அற்புதம்மாள்
Google

இந்தத் தீர்மானம் உடனடியாக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசியல் சாசனத்திற்குட்பட்டு முடிவெடுப்பேன் என ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு ஆண்டு முடிந்துவிட்டதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கவலை தெரவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது, 30.12.15ல் விடுதலை கோரி பேரறிவாளன் (எ) அறிவு தந்த மனு மீது முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றோடு 1 ஆண்டு முடிஞ்சு போச்சு. இந்த காத்திருப்பு கவலையை, மன அழுத்தத்தை தருது என தெரிவித்துள்ளார். 29 ஆண்டுகள் மிக அதிகம் ஆளுநர் என்ற ஹாஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்