என்னை வீட்டில் அடைத்து வைத்து.. பயமாக உள்ளது... திருமணமான 4 நாட்களில் கதறிய புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் கண்ணீருடன் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினி. இவரும் பிரதீப்குமார் என்பவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

காதலன் தாழ்ந்த சாதி என கூறி காதலுக்கு அஸ்வினி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளையை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 4ஆம் திகதி பிரதீப்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமான நான்கு நாட்களில் காவல் நிலையத்துக்கு வந்த தம்பதி தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நேற்று புகார் கொடுத்துள்ளனர்.

புதுப்பெண் அஸ்வினி கூறுகையில், பிரதீப்குமாரை அவமானப்படுத்தி என் பெற்றோர் மிரட்டல் விடுக்கிறார்கள்.

என் தந்தையின் நண்பரான தி.மு.க பிரமுகர் சி.ஜி.ஆனந்தன் கூலிப்படையை ஏவி எங்களை ஆணவக்கொலை செய்யப் பார்க்கிறார்.

என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தபோது பெல்டால் அடித்து துன்புறுத்தியதோடு ஒருவேளை சாப்பாடு தான் கொடுத்தனர்.

எங்களின் நண்பர்கள் சிலரை இப்போது பிடித்து கட்டிவைத்துத் தாக்குகிறார்கள். நாங்கள் அந்தக் கும்பலின் கண்ணில் பட்டால் கண்டிப்பாகக் கொலை செய்துவிடுவார்கள் என பயமாக உள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய சி.ஜி.ஆனந்தன், பிரதீப்குமார் ஏற்கெனவே நான்கைந்து பழக்கம் வைத்துள்ளான். அஸ்வினியை பேசி மயக்கி ஏமாற்றி அழைத்து சென்றுள்ளான்.

இது குறித்து அஸ்வினி பெற்றோர் என்னிடம் கூறியதையடுத்து அவரை கண்டுப்பிடித்து கொடுங்கள் என பொலிஸ் புகார் கொடுத்தோம், என் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்