சொகுசு பங்களாவில் தனியாக வாழ்ந்த கோடீஸ்வரர் சபலத்தை பயன்படுத்தி கொண்ட பெண்! அவருக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் வசித்த கோடீஸ்வரர் கொலை வழக்கில் கைதான பெண் பிரீத்தி, வழக்கறிஞர் தொழில் செய்ய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள சொகுசு பங்களாவில் தனியாக வந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (50).

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த இவருக்கு சொந்தமாக வணிக வளாகம் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதால், அவற்றின் மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வாடகை வந்துள்ளது.

இந்நிலையில் தனது வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண் அழகில் மயங்கிய பரத்வாஜ் அவரை அடைய நினைத்தும் முடியவில்லை.

இதை தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பிரீத்தி (35) அந்த பெண்ணை பணிய வைப்பதாக கூறி, பரத்வாஜிடம் பல மாதங்களாக, 65 லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.

ஆனால், பரத்வாஜ் நினைத்தது நடக்காததால், பிரீத்தியிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

இதையடுத்து பணத்தை திருப்பி தருவதாக கூறி அவரை காசிமேட்டில் நடுக்கடலுக்குள் பிரீத்தி கூலிப்படையினருடன் அழைத்து சென்று கடந்த யூன் மாதம் கொலை செய்தார்.

அவரது உடல் கடலில் வீசப்பட்ட நிலையில் இது தொடர்பாக பிரீத்தி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரீத்தி, தொடர்ந்து வழக்கறிஞர் தொழிலை செய்ய தடை விதிக்க பொலிசார் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதை ஏற்ற பார் கவுன்சில், நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக ஆஜராக பிரீத்திக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்