அந்த தொழில் செய்ய மறுத்த மனைவி... கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டிய கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த மனைவியை கணவன் கொலை செய்து சாக்குமூட்டியில் கட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தென்மேற்கு டெல்லியில் கடந்த ஆகஸ்டு 6ம் திகதியன்று பெண் ஒருவரின் சடலம் சாக்குமூட்டையில் கட்டி கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், அவருடைய புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.

அதனை பார்த்த பெண்ணின் உறவினர் ஒருவர் ஆகஸ்டு 17ம் திகதியன்று பொலிஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜலீக் ஷேக் (27) கடந்த 2014ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

ஜலீக் ஷேக்கின் முதல் மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஜலீக் ஷேக் நீண்ட நாட்களாகவே அவருடைய இரண்டாவது மனைவியை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதற்கு அவருடைய மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்டு 5ம் திகதியன்று ஆத்திரமடைந்த ஜலீக் ஷேக், பாத்திமாவை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தூக்கி எறிந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் அவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers