சிறைக்குள் கேக் வெட்டி.. கடா விருந்தளித்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய கொலைகாரன்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர், சிறைக்குள் கேக் வெட்டி, கைதிகளுக்கு கடா விருந்தளித்து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பீகாரில் சீதாமரி சிறையிலே இச்சம்பவம் நடந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு Darbhanga-ல் இரண்டு பொறியாளர்கள் கொல்லப்பட்ட இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பிந்து திவாரி என்ற கொலைகாரனே, சமீபத்தில் தனது பிறந்தநாளை சிறைக்குள் கொண்டாடியுள்ளார்.

சிறைக்குள் கேக்கை வெட்டி, கடா விருந்தளித்த திவாரி, மற்ற கைதிகளிடமிருந்து பரிசுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் பீகாரில் சிறை நெறிமுறைகள் மீறல் தொடர்பாக பல கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

The fellow inmates were also seen singing happy birthday for Pintu as he cut his cake.

வெளியான வீடியோவின் மூலம், விருந்துக்கு ஏற்பாடுகள் செய்ய சிறை வளாகத்திற்குள் கேட்டரிங் சேவை ஆட்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் மொபைல் போன் இருந்தது, அதன் மூலம் முழு பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் படமாக்க பயன்படுத்தப்பட்டது என்பதும் வீடியோவின் மூலம் தெளிவாகிறது.

வீடியோ வெளியானத்தின் மூலம் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும். சிறை ஐஜி மிதிலேஷ் மிஸ்ரா, சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்