படுக்கையறையில் மருமகள் உடை மாற்றும் போது உள்ளே வந்த மாமனார்... அனுபவித்த வேதனை.. நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மாமனார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த மருமகள் அவரையும், மாமியாரையும் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் ஜம்பகிகேடி கிராமத்தை சேர்ந்த தம்பதி சித்தராய மல்லேஷ்வரா - கலாவதி. இவர்களது மருமகள் கீதா.

56 வயதான சித்தராயவுக்கு மருமகள் கீதா மேல் தவறான பார்வை ஏற்பட்டது. அதனால் தினந்தோறும் அவருக்கு பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.

ஒருமுறை படுக்கையறையில் கீதா உடை மாற்றி கொண்டிருந்த போது உள்ளே வந்த சித்தராய அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு கீதா மன ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டார். ஆனால் இது குறித்து கணவரிடம் எதுவும் சொல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதை தனக்கு சாதகமாக எடுத்து கொண்ட சித்தராய, நேற்று காலையும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், கீதாவை சீரழிக்க முயன்றுள்ளார்.

இதில் ஆத்திரமும், பொறுமையும் இழந்த கீதா, வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாமனாரின் தலையில் ஓங்கி அடித்தார். அவர் இரத்த வெள்ளத்தில் கீழே சரிவதை பார்த்து ஓடி வந்த மாமியார் கலாவதி கீதாவை தடுக்க முயன்றதால், மாமியாரையும் ஆவேசமாக தாக்கினார். இதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றிவிட்டு கீதாவை கைது செய்தனர்.

பொலிசில், மாமனார் தனக்கு எந்தளவு தொல்லை கொடுத்தார் மற்றும் அதன் காரணமாகவே அவரை கொன்றேன் எனவும் கீதா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்