நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால்...மண்ணின் மைந்தனை விட்டு கொடுக்க முடியாது... சீமான் பரபரப்பு பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சீமான் அளித்துள்ள பேட்டியில், ரஜினிக்கு அடுத்து முதலிடத்தில் விஜய் தான் இருப்பார். அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயின் தாய் சொன்னது சரிதான்.

யார் யாரோ கட்சி ஆரம்பிக்கும் போது நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் என்ன? அவர் கட்சி தொடங்கினால் வரவேற்பேன். நான் முன்னிலைப்படுத்தித் தான் விஜய் முன்னிலைப்பட வேண்டுமா?

அவர் முன்னணியில் தானே இருக்கிறார். இன்னும் ரஜினிகாந்த் ஒரு 4 படங்களில் நடிப்பார்? அதன்பிறகு யார் முதன்மை இடத்தில் இருப்பார்? விஜய் தானே இருப்பார். இரண்டு பேருக்கும் தான் போட்டி உள்ளது.

நான் ரசிகர்களை தொண்டர்களாக்கி அரசியலுக்கு வரவில்லை. கமல், ரஜினி, விஜயகாந்த் போன்று நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களைத்தான் சந்தித்தேன். ஆகவே நாங்கள் வெற்றி பெற காலம் பிடிக்கும்.

சர்வதேச சமூகம், தமிழர் என்ற இனமா அல்லது இந்தியா என்ற பெருநாட்டின் நட்பா என்று பார்த்தால், இந்தியாவின் நட்பைத்தான் விரும்புவார்கள்.

அந்த இந்தியா தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. தமிழர்களை அழித்த இலங்கையின் நண்பனாக இருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆடை குறித்து விமர்சிப்பவர்கள் வேலை இல்லாதவர்கள்

என்னதான் இருந்தாலும் என் மண்ணின் முதல்வரை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்