பேஸ்புக் நண்பனை நேரில் காண ஆசையாக சென்ற மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்! புகைப்படம் வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பேஸ்புக் மூலம் நட்பான இளைஞரை நேரில் சந்திக்க சென்ற மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி பேஸ்புக் மூலம் நவீன் ரெட்டி என்ற இளைஞருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நட்பானார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி மாணவி வீட்டிலிருந்து காணாமல் போனார்.

இது குறித்து அவர் தந்தை பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நவீன் ரெட்டி என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சிறுமியின் தலையில் கல்லை போட்டு அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவளை நேரில் சந்திக்க வேண்டும் என நான் கூறியதையடுத்து என்னை காண வந்தாள்.

பின்னர் திறந்தவெளியாக இருந்த ஒரு இடத்தில் இருவரும் பேச முடிவெடுத்து என் காரில் மாணவி ஏறினாள். போகும் வழியில் அவளுடன் பாலியல் ரீதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறினேன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரிலிருந்து இறங்க நினைத்தவளை தடுத்து நிறுத்தி பலாத்காரம் செய்ய முயன்றேன்.

பின்னர் அவளை கீழே இறக்கி அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நவீன் காட்டிய இடத்திலிருந்து மாணவியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்றே கருதுகிறோம், இருந்தாலும் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே அது குறித்த முழுமையான தகவல் தெரியவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்