லண்டனில் உள்ள மகளுக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை குறித்து உருக்கமாக பேசிய நளினி

Report Print Raju Raju in இந்தியா

சிறையிலிருந்து பரோலில் வெளியில் வந்த நளினி இரண்டாவது முறையாக சிறையில் உள்ள கணவர் முருகனை சந்தித்து மகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி மகள் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்த நிலையில் அவரின் பரோல் மேலும் மூன்று வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் என் மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியதுள்ளது.

அதனால் முருகனை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நளினி மனு அளித்தார். அந்த மனுவை, சிறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கடந்த 13-ந் திகதி நளினி, முருகன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்த 15 நாட்கள் முடிந்து விட்டதால் 2-வது முறையாக முருகன்-நளினி சந்திப்பு நேற்று நடந்தது.

நளினி, முருகன் சந்திப்பு 1 மணி நேரம் நடந்தது. அப்போது லண்டனில் உள்ள மகள் திருமண ஏற்பாடுகள் குறித்தும் மாப்பிள்ளை பார்த்தது சம்பந்தமாகவும் 2 பேரும் உருக்கமாக பேசிக்கொண்டனர்.

சந்திப்பு முடிந்ததும், நளினியை சத்துவாச்சாரியில் அவர் தங்கியிருக்கும் வீட்டிற்கு பொலிசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers